சிதம்பரம் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் பேரிடர் குறித்து விழிப்புணர்வு மற்றும் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை எதிர்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை காவல்துறை இணைந்து பேரிடர் குறித்து விளக்கங்களுடன் ஆத்ம மித்ரா தன்னார்வலர்கள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி ஓம் சக்தி திருமண மண்டபத்தில் துணை வட்டாட்சியர் புஷ்பராஜ் முன்னிலையில் மற்றும் சிதம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பாக கோ பிரபாகரன் நிலைய அலுவலர் தலைமையில் பேரிடர் காலங்களில் எவ்வாறு உதவிகளை பயன்படுத்துவது மற்றும் பேரிடர் ஆணையம் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுமக்களுக்கு அளித்து செயல்படுவது என்பது குறித்து செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment