சேத்தியாத்தோப்பு அருகிலுள்ள பின்னலூர் அரசுப்பள்ளி மாணவர்களிடையே சேத்தியாதோப்பு தீயணைப்பு நிலையத்தினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழிப்புணர்வு செய்முறை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம்சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடையே சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தினரால் வருகின்ற தீபாவளியைவிபத்தில்லாமல் கொண்டாடுவது எப்படி? என்பது பற்றியும், அடுத்து வர இருக்கிற வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது எப்படி?என்பது பற்றிய விழிப்புணர்வு தரும் செய்முறை விளக்கமும் நடத்தி காண்பிக்கப்பட்டது.
இது பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது. தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் R. நடராஜன் தலைமையில் முன்னணி தீயணைப்பு வீரர்அசோக் மற்றும் நிலையப் பணியாளர்கள் கலந்து கொண்டு விளக்க செய்முறை நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தனர்.
No comments:
Post a Comment