இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி திட்டத்தை செய்ய முடியாமல், திட்டத்தை கைவிட்டவர் கருணாநிதி எனவும், ஆனால் அதிமுக ஆட்சி அமைந்ததும், புதிய வீராணம் திட்டம் என்ற பெயரில், சென்னை மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தைக் கொண்டு வந்து, சபதத்தை நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா என்று புகழாரம் சூட்டினார். மேலும் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், அதிமுகவின் திட்டங்களை பொதுமக்களிடையே சென்று கூற வேண்டும் எனவும், அதேபோல் திமுக ஆட்சியில் அரங்கேறி வரும் அவலங்களையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் செயல்வீரர் மற்றும் வீராங்கனைகளின் முக்கிய கடமையாக இருக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பெண்களிடம் திமுக ஆட்சியின் அவலங்களை பற்றி கேட்டபோது ஆதங்கத்துடன், கஞ்சா பழக்கவழக்கங்களால், வடலூர் நகரத்தில் நாள்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், மின் கட்டண உயர்வால் இல்லத்தரசிகள் கடும் வேதனை அடைந்து வருவதாக தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இந்த நிலை தொடராமல் இருக்க, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப அனைத்து நிலை, பொறுப்பாளர்களும் சிறப்பாக களப்பணி ஆற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி, அம்மா பேரவை துணைச் செயலாளர் பகத்ரட்சகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட வடலூர் நகர சார்பு அணி நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், தெற்கு மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment