கடலூர் மாவட்டம், புவனகிரியில் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால், இதை இடித்து விட்டு புதிதாக கட்ட அரசு ஒப்புதல் வழங்கியது. ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மூலம் ரூ 5 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கு சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் பழைய கட்டிடங்களை இடிக்கும் பணியில் இன்று அதிமுக சேர்மன், கவுன்சிலர்கள் இதில் திமுக கவுன்சிலர்களும் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் மூலம் பழைய கட்டிடங்களை இடிக்க துவங்கினர். அப்போது புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஒப்பந்தம் எடுத்த திமுக மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி அவருடைய கணவர் வெங்கடேசன் அவருடைய மகன் அமர்நாத் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக அங்கு வந்த திமுகவினர், பழைய கட்டிடங்களை அதிமுகவைச் சேர்ந்தவர்களின் ஆதரவாளர்கள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புவனகிரி போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி பொக்லைன் எந்திரத்தை வெளியே அனுப்பினர். பின்னர் அதிகாரிகளிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பணிகளை துவக்க வேண்டும் என கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர். தற்போது பிரச்சனை இருப்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதா அலுவலகம் வராததால் அதிமுக திமுக கவுன்சிலர்கள் வெளிய அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரச்சனை நீண்டு கொண்டே இருப்பதால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பிரச்சனையை முடிக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இது குறித்து கவுன்சிலர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர், மேல் புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தை இடிப்பது தொடர்பாக ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊடகத்திற்கு பேட்டி: பழைய கட்டித்தை இடிப்பதற்கு பொது நிதியிலிருந்து பணி ஆணை வழங்கப்பட்டது. பொது நிதி என்பதால் அதிமுக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி சார்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி பணியினை மேற்கொண்டோம். ஆனால் திமுக மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி என்பவரின் கணவர் வெங்கடேசன் என்பவர் தலைமையில் திமுக-வினர் இந்த பணியை தடுத்து வருகின்றனர்.
திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் புவனகிரி நகர செயலாளர் மற்றும் திமுக-வினரை காவல் துறை பாதுகாத்து வருகின்றனர் இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் ஆட்சியர் அவர்களிடம் கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. வட்ர வளர்ச்சி அலுவலர்கள் எந்த பக்கம் பேசுவது என்பதற்கு பயந்து அலுவலகம் வருவதில்லை இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
No comments:
Post a Comment