இது போன்று தினசரி இந்த இடத்தில் பல விபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன இதற்கு காரணம் அந்த இடத்தில் ஸ்பீடு பிரேக்கர் இல்லாததனால் கடலூரில் இருந்து வரும் வாகனங்களும் விருதாச்சலத்தில் இருந்து வரும் வாகனங்களும் பள்ளியை அருகே சாலையை வேகமாக கடந்து செல்லும்போது பள்ளி மாணவ மாணவியர்களை அழைத்து வரும் பெற்றோர்களும் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர், பலமுறை சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டுகொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட கடலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளி எதிரில் ஸ்பீடு பிரேக்கர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் பள்ளி ஆரம்பிக்கும் நேரங்களிலும் பள்ளி விடும் நேரங்களிலும் ஆட்களை நியமித்து பள்ளி மாணவ மாணவிகளை பாதுகாப்பாக சாலையை கடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments:
Post a Comment