குறிஞ்சிப்பாடியில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 October 2024

குறிஞ்சிப்பாடியில் சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் வருடாந்தோறும் அக்டோபர் 13ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது இதனை நினைவு கூறும் வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறையினர் வருவாய்த்துறையினர் இணைந்து நடத்திய பேரிடர் அபாய குறைப்பு செயல்முறை நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில்  நடத்தப்பட்டது.

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அசோகன் துணை தலைமையிலும் துணை வட்டாட்சியர் கந்தவேல் மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல் வருவாய் ஆய்வாளர் மாலினி கிராம நிர்வாக அலுவலர் சங்கர் குறிஞ்சிப்பாடி காவல் ஆய்வாளர் ராஜா தாமரை பாண்டியன் உதவி ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் உத்திராபதி மேற்பார்வையில் குறிஞ்சிப்பாடி தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் இயற்கை பேரிடர் மற்றும் அபாய காலங்களில் தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

*/