கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் ஆர் எஸ் எஸ் தொடங்கப்பட்டு 99 ஆவது ஆண்டு நிறைவடைநது 100 ஆண்டு மற்றும் ஸ்ரீ அகல்யா பாய் கோல்கரின் 300 வது ஆண்டு ஸ்ரீ அருட்பிரகாச வள்ளலாரின் 200 ஆண்டு நிறைவு மற்றும் சுவாமி சகஜானந்தரின் 133 ஆம் ஆண்டு நிறைவு ஆகிய முப்பெரும் விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஜி எம் வாண்டையார் திருமண மண்டபத்தில் இருந்து சீருடை அணிந்து அணிவகுப்பு ஊர்வலமாக சென்று போல் நாராயணன் தெரு வந்தடைந்து பதஞ்சலன் மற்றும் பொது நிகழ்ச்சி துவங்கியது.
நோக்கம் சீருடி அணிந்து தொண்டர்கள் நிமிர்ந்து நன்னடை நேர்கொண்ட பார்வை அணிவகுத்து செல்வதை பார்த்து சமுதாயம் தன்னம்பிக்கையும் ஒற்றுமை உணர்வும் அடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் இதை கருத்தில் கொண்டே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன 1962 ல் சீன போர் நேரத்தில் இந்திய அரசுக்கு தொண்டர்கள் செய்த உதவிகளை பாராட்டி 1963ல் டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்களை அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அரசாங்கம் அழைத்தது வரலாறு இன்று நீதிமன்ற உத்தரவை மதித்து வருங்காலங்களில் தமிழக அரசும் காவல்துறையும் தாமாகவே முன்வந்து ஆர்எஸ்எஸ் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கும் என்று நம்புகிறோம் சங்க நூற்றாண்டின் தொடக்கமாக இந்த ஆண்டில் குடும்பம் மேன்மை சமுதாய நல்லிணக்கம் சிறு நன்மை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குடிமக்கள் கடமைகள் இந்த ஐந்து அம்சங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கிறோம் பொதுமக்களுக்கும் இந்த பணிக்கு நினைவு தேசப்பணியில் தோள் கொடுக்க அன்புடன் அழைக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதில் ஊர்வலத்தை கொடியேசித்து மகா ஸ்ரீ ஸ்ரீ யுத்தேஸ்வர் சுவாமிகள் மாதேஷ் மகா சமஸ்தானம் கோவை துவக்கி வைத்தார் தலைமை கயிலை செல்வர் ஸ்ரீ எஸ் ஆர் ராமநாதன் ஸ்ரீ நடராஜ விலாஸ் ஜுவல்லரி சிதம்பரம் முன்னிலை ஸ்ரீ க தண்டபாணி வழக்கறிஞர் LCC Global Infotech சிறப்புரை ஸ்ரீ PS ஐயப்பன் ப்ராந்த சஹ சாமாஜிக் ஸமரஸதா ஸம்யோஜக் வட தமிழ்நாடு மற்றும் ந.செல்வராஜ் கடலூர் மாவட்ட தலைவர் ஆர் எஸ் எஸ் மற்றும் ஏராளமான ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு மற்றும் பொது நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக சிதம்பரத்திலிருந்து செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment