கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நடு கஞ்சங்கொல்லை கிராமப் பகுதி உள்ளது. இந்த கிராமப் பகுதி அருகில் வடக்கு ராஜன் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பல்வேறு பகுதிகளுக்குத் தண்ணீர் செல்லும் முக்கிய வாய்க்காலாகும். இதனிடையே கிராமத்திலிருந்து மறு பகுதியில் உள்ள வயல்வெளி மற்றும் பல்வேறு தேவைகளுக்காக நடுகஞ்சங்கொல்லை நேரு நகர் பகுதியில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலை கடப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வந்தனர். இந்த பாலத்தின் முகப்புப் பகுதி தற்போது உடைந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் தற்போது பாலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனையோடு கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே இந்த பாலத்தின் உடைந்த பகுதியை வலுவான கான்கிரீட் பில்லர் அமைத்து சரி செய்ய வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து மனு அளித்த நிலையிலும் இதுவரை சரி செய்யப்படாமல் இருந்து வருகிறது. உடனடியாக அதிகாரிகள் நடுகஞ்சங்கொல்லை பாலத்தினை பராமரிப்புப்பணிகள் செய்து கிராம மக்களும், பள்ளி, கல்லூரி, மாணவர்களும்,விவசாயிகளும் இயல்பாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment