கடலூர் மாவட்டம் புவனகிரியில் நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் தேவதாஸ் படையாண்டவர் செயலாளர் செல்வமகேஷ் ஆகியோர் தலைமையில் புவனகிரி பாலம் அருகாமையில் தியாகிகள் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினார் மேலும் இதில் மாநில பொறுப்பாளர்கள் வேல்முருகன் ஜெகன் செட்டியார் மாவட்ட பொறுப்பாளர்கள் சம்பத் வாசு தேவன் செந்தில்குமார் இளையராஜா சின்னமணி உமாபதி ஜெயசீலன் கார்த்தி சரண் முன்னாள் நகரச் செயலாளர் பிரபு ஒன்றிய செயலாளர் ஹரிபுத்திரன் பிரேம் விஜய் புரட்சி பாலா நகர நிர்வாகிகள் வீரமணி செல்வம் பிரகாஷ் சதீஷ் மணிகண்டன் ஐயப்பன் வினோத் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார் நிகழ்ச்சி ஏற்பாட்டினை புவனகிரி நகர செயலாளர் க.கோபிநாத் செய்திருந்தார்.
No comments:
Post a Comment