கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க நுழைவு வாயில் முன்பு என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்கு வீடு நிலம் கொடுத்து வாரிசு அடிப்படையில் பணிக்கு சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வைத்திருப்பதாகவும் எனவே தங்களுக்கு நிரந்தர ஒப்பந்த தொழிலாளர் பணி வழங்கி சரியான ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சுரங்க வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதிக்குள் non AMC ஒப்பந்த தொழிலாளராக மாற்றி தருவதாகவும் சரியான ஊதியம் வழங்குவதாகவும் என்எல்சி நிறுவனம் பேச்சுவார்த்தையில் உறுதியளித்திருந்தது இந்த நிலையில் 10ம் தேதி முடிவடைந்து ஒரு வார காலமாகியும் இன்றுவரை செயல்படுத்தாததால் அதிருப்தி அடைந்த தொழிலாளர்கள் இன்று காலை முதல் மீண்டும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment