வடலூர் அருகே குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய் உணவின்றி இரண்டு நாட்களாக கம்மங்காட்டிற்குள் பரிதவித்த அவலம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 September 2024

வடலூர் அருகே குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய் உணவின்றி இரண்டு நாட்களாக கம்மங்காட்டிற்குள் பரிதவித்த அவலம்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எம் ஏரி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் வயது 35 இவருக்கு பண்ருட்டி அருகே உள்ள கோவில் மேடு பகுதியைச் சேர்ந்த சமத்துவ வள்ளி என்பவருடன் திருமணம் ஆகி நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் ராமராஜ் வேலை தேடி வடலூர் வானதிராயபுரத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடியேறியுள்ளார், அங்குள்ள கம்மங் கொல்லையில் வேலை செய்து கொண்டு தனது பிள்ளைகளுடன் கொள்ளையின் நடுவே சிறு ஒட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் முதல் மனைவி ராமராஜன் பிரிந்து சென்ற பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாக மீனா என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மீனாவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், ராமராஜ் தனது 4 ஆண் பிள்ளைகள் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வடலூர் அருகே உள்ள வானதி ராயபுரம் பகுதியில் உள்ள கம்மங் கொல்லையில் கொட்டகை அமைத்து வசித்து வந்துள்ளார், மேலும் அப்பகுதியில் கூலி வேலை செய்து தினமும் பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.


இந்நிலையில் அவருடன் வசித்து வந்த இரண்டாவது மனைவியான மீனா திடீரென தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமான நிலையில் அன்று முதலே மீதமுள்ள நான்கு ஆண் குழந்தைகளும் கம்மங் கொள்ளையின் நடுவே ஆதரவற்ற நிலையில் உணவின்றி தவித்துள்ளனர், பின்னர் இது குறித்து தகவல் அறிந்த விடியல் சமூக சேவை அமைப்பு நிறுவனர் புஷ்ப.சவுரிராஜன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் குழந்தைகளை மீட்டு கடலூர் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர் தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தைகளை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். 


இரண்டு நாட்களாக கம்மங்காட்டிற்குள் குழந்தைகளை  தாய் தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment

*/