நெடுஞ்சாலை ஓரம் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 September 2024

நெடுஞ்சாலை ஓரம் உள்ள மின் கம்பங்களை அகற்றாமல் சாலை போடும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.


கடலூர் சேலம் நெடுஞ்சாலை விரிவாக்க பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் வடலூர் முதல் குறிஞ்சிப்பாடி வரை சாலைகளில் இருபுறமும் வடிகால் அமைக்கப்பட்டு வடிகாலுக்கும் ஏற்கனவே உள்ள பழைய சாலைக்கும் நடுவே புதிய சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் புதிய சாலை அமைப்பதற்கு முன் சாலையோரங்களில் உள்ள மின் கம்பங்கள் முழுமையாக அகற்றப்படாமல் மின்கம்பத்தை சுற்றி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வாகன ஓட்டிகள் இடையே மிகுந்த குழப்பம் நிலவி வருகிறது இதுபோன்று மின் கம்பங்களை சுற்றி சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். 

மேலும் சாலையோரங்களில் உள்ள மின் கம்பங்களை முற்றிலுமாக அகற்றிய பிறகு சாலை மேற்கொள்ளும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment

*/