கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மருவாய் அருகே நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது இதனால் ஒரு புறம் உள்ள சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் சென்று வருகின்றனர் இந்நிலையில் குண்டும் குழியுமான சாலையில் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது அதிக அளவு புழுதி கிளம்புவதால் கிண்ணே வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் தங்கள் முகங்களில் புழுதி அடிப்பதால் எதிரே வரும் வாகனத்தை சற்றென பார்க்க முடியாத நிலை உள்ளதாகவும் இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்
இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழல் நிலவி வரும் நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி நெடுஞ்சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களிடம் சாலைகளில் தண்ணீர் பீச்சி அடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை அவளையே பயணிக்கும் இருசக்கர வாகனங்கள் சார்பில் எழுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment