கடலூர் அரசு தலைமை மருத்துவமனை பெண் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கழிவறை சுத்தம் செய்யப்படாததால் நோய் தொற்று பரவும் அபாயம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை பெண் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கழிவறை சுத்தம் செய்யப்படாததால் நோய் தொற்று பரவும் அபாயம்.


கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகின்றது இங்கு தினமும் சிகிச்சை பெறுவதற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 1000 திற்கு மேற்பட்ட பொதுமக்கள்  வந்து  செல்கின்றனர் இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் பின்பறம் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவின் உட்புறம் செயல்பட்டு வரும் பெண் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் கழிவறை சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது கழிவறைக்கு செல்லும் பெண்கள் மூக்கை துனியால் மூடியவாறு கழிவறையின் உள்ளே சென்று வருகின்றனர்.
 

மேலும் கடும் துர்நாற்றம் வீசி வருவதால் பெண் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிரமமடைந்து வருகின்றனர், கடலூர் அரசு  தலைமை மருத்துவமனையில் இது போன்ற சுகாதார சீர்கெட்டு ஏற்படுத்தும் வகையில் பராமரிக்கப்படும் கழிவறைகளால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் புலம்பி வருகின்றனர்.


மேலும் டெங்கு காய்ச்சல் மாவட்டம் முழுவதிலும் அதிகமாக பரவி வரும் சூழலில் கழிவறை சுத்தம் செய்யாமல் கொசு உற்பத்தி அதிகமாகி மருத்துவமனை வளாகத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகளுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக  குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது கவனம் கூர்ந்து நோயாளிகளின் நலன் கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

*/