செயலாளராக ANG லோகநாதன், பொருளாளராக விநாயக முருகன், துணைச் செயலாளராக ஜெயசீலன் ஆகியோர் பொறுப்பேற்றனர். உடனடி முன்னாள் தலைவர்எஸ். சௌந்தர்ராஜன் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், மாவட்ட இரண்டாம் துணைநிலை ஆளுநர் சாலை. கனகதாரன், முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் கீதா கமலக்கண்ணன், மாவட்டத் தலைவர் (மாநாடுகள்) அகர்சந்த் சோரடியா மற்றும் இயக்குனர்கள், முன்னாள் நிர்வாகிகள், முன்னாள்உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள், பார்வையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக சேத்தியாத்தோப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் தங்க.குலோத்துங்கன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சேத்தியாத்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பள்ளிகளில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் மூன்றாம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனமும், ஏழ்மை நிலையில் உள்ள தினக் கூலி தொழிலாளர்களுக்கு நிவாரண உதவியாக அரிசிப் பைகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment