கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கழக அமைப்பு செயலாளர் மற்றும் கடலூர் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் இரா.சொரத்தூர் இராஜேந்திரன் கலந்து கொண்டார் பின்னர் கூட்டத்தில் அவர் பேசுகையில் மக்கள் பயன்பெறும் திட்டம் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது எனவும் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த மக்கள் பயன்பெறும் திட்டங்களை முடக்கியது ஆளும் திமுக அரசு என பேசினார்.
மேலும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காக பல அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் இதனால் மகளிர்கள் அனைவரும் பயன்பெற்று வந்தனர் ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது மேலும் வள்ளலார் சத்திய ஞான சபையில் அதிமுக ஆட்சியில் முதியோர் காண மணிமண்டபம் அமைக்கப்பட்டது என்றார்.
மேலும் தற்பொழுது நடந்து வரும் திமுக ஆட்சியில் கொலை கொள்ளை கற்பழிப்பு ஆகியவை அதிக அளவில் நடந்து வருவதாகவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறியது ஸ்டாலின் ஆட்சி என்றார், கூட்டத்தில் அதிமுக ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment