BYST- சிஸ்கோ நிறுவனத்தின் சார்பாக 13/9/2024 அன்று கந்தசாமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிசினஸ் ஐடியா காண்டெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 September 2024

BYST- சிஸ்கோ நிறுவனத்தின் சார்பாக 13/9/2024 அன்று கந்தசாமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிசினஸ் ஐடியா காண்டெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது.


BYST- சிஸ்கோ நிறுவனத்தின் சார்பாக 13/9/2024 அன்று கந்தசாமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிசினஸ் ஐடியா காண்டெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்  பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

மேலும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திரு ஏ எல் ஆகாஷ் ஐஏஎஸ் அவர்கள் துணை மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்  மேலும் அவர் கூறியதாவது கடலூரில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிறைய புதிய தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்றும் அதற்கு பி ஒ எஸ் டி உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.

இந்நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் திரு  ஸ்ரீதர் mentor அவர்கள் வரவேற்றார். மேலும் கடலூர் மாவட்ட இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திரு கௌரிசங்கர் ராவ் அவர்கள் கலந்துகொண்டு புதிய தொழில் முனைவர்களுக்கான வழிகாட்டி மற்றும்  ஆலோசனைகளை வழங்கினார். பாரதிய யுவசக்தி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திருமதி அருணா வினோத் குமார் அவர்கள் கலந்து கொண்டு பி ஓ எஸ் டி என் செயல்பாடுகள் பற்றி விளக்கி கூறினார்.  

மேலும் சிஸ்கோ நிறுவனத்தின் founder திருமதி ரோகிணி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.  இதன் தொடர்ச்சியாக கந்தசாமி நாயுடு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் திருமதி டாக்டர் எஸ் ஷபினா பானு அவர்கள் தொழில் முனைவோர்களுக்கான நிதி நிறுவனங்களின் பங்கீடு பற்றி பேசினார்.  இறுதியாக BYST யின் மூத்த ஆலோசகர் திரு ஜெயக்குமார் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியின் இறுதியாக BIC வாகனத்தை  திரு ஆகாஷ் ஐஏஎஸ் அவர்கள்  கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  

BYST தமிழ்நாடு திட்ட அதிகாரி திரு பிரான்சிஸ் அவர்கள் இந்த நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட BYST யின் பணியாளர்களை வைத்து ஒருங்கிணைத்தார்.

No comments:

Post a Comment

*/