புவனகிரி அருகே ஒரத்தூரில் அதிமுக சார்பில்அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 September 2024

புவனகிரி அருகே ஒரத்தூரில் அதிமுக சார்பில்அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஒரத்தூர் கிராமத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.பி. கருப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் ராமச்சந்திரன் ராஜலெட்சுமி முன்னிலை வகித்தார். 

இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழி தேவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்  கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் இவர்கள் மின்சார கட்டணத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தியுள்ளார்கள். மாதம் ஒரு முறை மின்சார கணக்கீடு செய்வதாக சொன்னவர்கள் அதை செய்யவே இல்லை. அனைவருக்குமான நல்லாட்சி தந்த எடப்பாடி  .பழனிச்சாமி அவர்களை மீண்டும் நாம் 2026ல் தமிழகத்தின் முதல்வராக்கி தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களை செய்ய வைப்போம் என கழக நிர்வாகிகள், பொது மக்களிடையே சிறப்புரையாற்றினார்.  

இந்தக்  கூட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், ஒன்றியச் செயலாளர்கள் விநாயகமூர்த்தி, சி. என். சிவப்பிரகாசம், சீனிவாசன் மற்றும் நகர செயலாளர்கள், கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட அதிமுக கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/