கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கடைவீதியில் ராஜீவ் காந்தி சிலை அருகே சேத்தியாத்தோப்பு நகரஅனைத்து மோட்டார் சங்கம் சார்பில் 24 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கம்பு, கரும்பு, சோளக்கதிர், கொழுக்கட்டை, அவல் பொரி, விளாம்பழம், பேரிக்காய் மற்றும் பல வகைபழ வகைகள் போன்றவற்றை வைத்து தூப, தீப, ஆராதனைகள் செய்து படையல் செய்யப்பட்டது.
இதில் வாகன உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள். பக்தர்கள், பயணிகள் மற்றும் பொது மக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள். பக்தர்களுக்கும், பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் படையல் செய்த சுண்டல், கொழுக்கட்டை, அவல் பொரி இவைகளும் தயிர் சாதம், லெமன் சாதம், என அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment