ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 September 2024

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராக நல்லூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ பால விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் காலை 6 மணி முதல் ஏழு மணி வரை கணபதி ஓமம் நவக்கிரக ஹோமம் தனலட்சுமி ஓமம் நடைபெற்றது ஏழாம் தேதி மாலை 6 மணி அளவில் அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை மிருத்சங்ரஹணம் அங்குறை சொர்ப்பணம் ரக்க வந்தனம் கலாகர்ஹணம் கடப்பசனம் முதல் கால யாக பூஜை பூர்ண தீபா ஆராதனை நடைபெற்றது.

எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி மேல் கோ பூஜை சூரிய பூஜை இரண்டாம் கால பூஜை  தீப ஆராதனையாத்ராதனம் கடம் புறப்பாடு நடைபெற்று சுமார் 10 மணி அளவில் மேளதாளம் வழங்க ஸ்ரீ முத்துமாரியம்மன் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது இதில் கிராம நாட்டாமைகள் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பெரும் திரளானோர் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மனை வழிபட்டனர் 

No comments:

Post a Comment

*/