கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தவஅமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெறாக் ஒகினவா கோஜிரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி சார்பில் மாவட்டம்.மற்றும் மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஸ்ரீமுஷ்ணம் பகுதி பயிற்சியாளர்.பி சத்யராஜ்தலைமை தாங்கினார். பயிற்சியாளர் பிரித்தியூனன் அனைவரையும் வரவேற்றார். பயிற்சியாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். தலைமை பயிற்சியாளர் சென்சாய் வி. ரங்கநாதன்வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
மேலும் வரும் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரைஉஸ்பெஸ்கிஸ்தான்நாட்டில் உலக அளவில் நடைபெறும் கிக் பாக்சிங் போட்டியில் நமது நாட்டின் சார்பாக வாக்கோ இந்தியா அணியுடன் இணைந்து நமது கடலூர் மாவட்ட வீருகிக் பாக்ஸிங் வீராங்கனைஎஸ். சுபாஷினியையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார். விழாமுடிவில் ஆர்.ஷர்மா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment