நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில், ஸ்டீம் லைன் வெடித்து விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சொசைட்டி தொழிலாளி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல் மின் நிலையத்தில், ஸ்டீம் லைன் வெடித்து விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சொசைட்டி தொழிலாளி.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் திறந்தவெளி சுரங்கத்தின் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டப்பட்டு மின்சாரம் தயாரித்து, தமிழகம் மட்டும் இல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில்,  ஒப்பந்த தொழிலாளி,  சொசைட்டி தொழிலாளி என சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின்,  இரண்டாவது அனல் மின் நிலையத்தில் உள்ள ஏழாவது யூனிட்டில், மேலக்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்லதுரை என்பவர் கிளீனிங் ஒர்க் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அதிக அழுத்தத்துடனும், அதிக வெப்பத்துடன் செல்லக்கூடிய ஸ்டீம் லைன் வெடித்து சிதறி உள்ளது. இதனால் அவ்விடத்தில் வேலை செய்து கொண்டிருந்த செல்லத்துரையின் உடல் முழுவதும், தீக்காயம் ஏற்பட்டு துடிதுடித்து கீழே விழுந்துள்ளார். 


இதனைப் பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு என்எல்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்பு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவமானது நேற்று முன்தினம் மதியம் நடைபெற்ற நிலையில், இந்த விபத்து குறித்து வெளியே எந்தவித தகவலும் வரவிடாமல், என்எல்சி நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்வதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சொசைட்டி தொழிலாளியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சொசைட்டி தொழிலாளி  செல்லதுரைக்கு நவீன சிகிச்சை அளிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கிறனர்.


தொடர்ச்சியாக என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளிகளுக்கு பணி பாதுகாப்பு என்பது முற்றிலுமாக கேள்விக்குறியாகி உள்ளதால், தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தொழிலாளி மற்றும் தொழிலாளியின் உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

*/