வடலூர் நகராட்சிக்கு சொந்தமான தற்காலிக கழிவறை பூட்டி கிடப்பதால் பயணிகள் அவதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

வடலூர் நகராட்சிக்கு சொந்தமான தற்காலிக கழிவறை பூட்டி கிடப்பதால் பயணிகள் அவதி.


கடலூர் மாவட்டம் வடலூர் பேரூராட்சி அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதும் வடலூர் பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது இதற்காக பழைய பேரூராட்சி அலுவலகம் இடிக்கப்பட்டு புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டு அதனை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார்.

இந்நிலையில் பயணிகள் இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக வடலூர் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை இடிக்கப்பட்ட நிலையில் பழைய பேரூராட்சி கட்டிடத்திற்கு அருகே தற்காலிக நகராட்சி கழிவறை அமைக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது அந்த கழிவறை பூட்டு போடப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் இரவு நேரங்களில் வடலூர் பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே நகராட்சி நிர்வாகம் கூட்டப்பட்டுள்ள கழிவறையை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/