குள்ளஞ்சாவடி அருகே நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக போக்குவரத்து மிகுந்த நேரத்தில் மரங்கள் வெட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

குள்ளஞ்சாவடி அருகே நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக போக்குவரத்து மிகுந்த நேரத்தில் மரங்கள் வெட்டப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி.


கடலூர் சேலம் நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது இந்நிலையில் விருதாச்சலம் முதல் வடலூர் வரை பணிகள் ஆங்காங்கே முடிக்கப்பட்ட நிலையில் குள்ளஞ்சாவடியிலிருந்து கடலூர் வரை நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்ற வருகிறது இதற்காக சுப்பிரமணியபுரம் அருகே சாலையோரங்களில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றது போக்குவரத்து அதிகம் மிகுந்த நேரங்களில் மகரத்தை வெட்டி அகற்ற படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பள்ளி முடியும் நேரங்களில் மரங்கள் வெட்டப் படுவதால் பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் மேலும் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் ஊழியர்கள் மரங்கள் வெட்டப்படுவதால் நீண்ட நேரம் நெடுஞ்சாலையில் காத்திருந்து தங்கள் வீடுகளுக்கு சென்று வருகின்றனர் எனவே நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வெட்டும் பணியை போக்குவரத்து குறைவாக உள்ள இரவு நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/