கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அம்மன் குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் புவனகிரி- விருத்தாசலம் சாலையில் அதே பகுதியில் வசித்து வரும் ரத்தினம் (75) என்பவர் டீக்கடைக்கு சென்று விட்டு சாலையோரமாக வந்து தனது வீட்டிற்க்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலையில் சென்ற சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டினை இழந்து அவர் மீது மோதி ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில்குடியிருப்புகள் மற்றும் அரசு தொடக்கப்பள்ளியும் இருந்து வருவதால் போதுமான விபத்துத் தடுப்புகளை அரசின் நெடுஞ்சாலைத்துறை ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
No comments:
Post a Comment