கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆயிபுரம் ஊராட்சியில் 'தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மக்களுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புவனகிரி வட்டாட்சியர் தனபதி தலைமை தாங்கினார்.
ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார் ரேவதி துணை வட்டார வளர்சி அலுவலர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜன் வரவேற்றார். மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை பரங்கிப்பேட்டை ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி அட்மா குழ தலைவர் ஆயிபுரம் ஜெயசந்திரன் ஆகியோர்கள் முகாமை தொடங்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் மாவட்ட மேற்பார்வையாளர் ஜோதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி வட்டார ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரேவதி கோபாலகிருஷ்ணன் திருநாவுக்கரசு, பாலகிருஷ்ணன் பழனியம்மாள் அஞ்சலி உள்பட ஏழு ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை கொடுத்தனர்.
இந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக அரசின் சார்பில் 16 துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்று,பல்வேறு சம்பந்தப்பட்ட மனுக்களை பெற்றார்கள்.
முடிவில் ஊராட்சி செயலர் மதியழகன். நன்றி கூறினார்.
No comments:
Post a Comment