தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு பரங்கிப்பேட்டை வட்டார தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று பரங்கிப்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு நகர தலைவர் G. ஆனந்தன் அவர்கள் தலைமை தாங்கினார் இக்கூட்டத்தில் நகரத் தலைவர் G.ஆனந்தன் மற்றும் பொதுச் செயலாளர் G.M.சாலிஹ் மரைக்காயர் ஆகியோர் கூறுகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அவர்கள் வணிகர்களின் நலனுக்காகவே பாடுபட்டு வருவதோடு வணிகர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்து வருகின்றார் ஒரு குடும்பமாக ஒருங்கிணைந்து தொழிலாளிகள் வளர்ச்சி பெறுவதற்கு பல்வேறு முறையில் பாடுபட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தப் பேரமைப்பில் 45 லட்சம் பேர்கள் உறுப்பினராக உள்ளனர் எங்களுக்கெல்லாம் ஒரே தலைவராக விக்கிரமராஜா அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார் தற்போது விக்கிரமராஜா அவர்கள் செயல்பாடுகள் மீது களங்கம் ஏற்படுத்தும் விதமாக சிலர் வீண் பழி சுமத்துகின்றனர் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி எடுபடாது பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிற்கு உறுதுணையாக இருப்பது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறினார்.
இதில் மக்கள் தொடர்பு அலுவலர் ரமேஷ். இணைச்செயலாளர் கவிமதி, அபுல் உசேன், நிர்வாகிகள் ஐய்யப்பன், கார்த்திக், குமார் PRO, மற்றும் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துக் கொண்டனர்
- செய்தியாளர் சாதிக் அலி
No comments:
Post a Comment