குள்ளஞ்சாவடியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 August 2024

குள்ளஞ்சாவடியில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பேருந்து நிலையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்தநாள்  முன்னிட்டு தேமுதிக சார்பில் 300 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது

கடலூர் வடக்கு மாவட்ட  தேமுதிக  செயலாளர் முன்னாள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினருமான ப.சிவக்கொழுந்து மற்றும் தேமுதிக மாவட்ட அவைத்தலைவர் S.ராஜாராம் அவர்களின் அறிவுறுத்தலின்படி குள்ளஞ்சாவடி பேருந்து நிலையத்தில் சுமார் 300க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தேமுதிக குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கே பி ஆர் சரவணன் தலைமையில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.


முன்னதாக தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர் K.சுமோசுரேஷ்  மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.S.செல்வராஜ், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொருளாளர் ஜெயபிரகாஷ் ,மாவட்ட பிரதிநிதி காசிராஜன் சமட்டிக்குப்பம் ஊராட்சி செயலாளர் S.M.சேகர் ,கிளை கழக செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர் இதில் ஒன்றிய துணை செயலாளர் ஜோதி மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் ஒன்றிய மாணவர் அணி செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய தொண்டரணி செயலாளர் சத்யராஜ் கிளை கழக செயலாளர் பழனிவேல்.பாலமுருகன். கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/