மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடலூர் நகர தேமுதிக கழகம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 August 2024

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வடலூர் நகர தேமுதிக கழகம் சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில்  மறைந்த தேமுதிக தலைவர்  கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தேமுதிக வடலூர் நகர செயலாளர் சாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தேமுதிக மாவட்ட மாணவரணி செயலாளர் எழிலரசன் கலந்துகொண்டு சிறப்பித்தார் பின்னர் வடலூர் நகராட்சி அலுவலகம் எதிரே ஆபத்தானபுரம் மற்றும் வெங்கடகுப்பம் ஆகிய வடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேமுதிக கழக கொடி ஏற்றப்பட்டது தொடர்ந்து வெங்கடக்குப்பம் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 100 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் ,பேனா வழங்கப்பட்டது மேலும் வடலூர் பேருந்து நிலையத்தின் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக தேமுதிகவினர் கொண்டாடினர்.


நிகழ்வில் வடலூர் நகரத் துணைச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், ஏழுமலை, கந்தன் மாவட்ட பிரதிநிதி  குமரவேல், வேல்முருகன் தேமுதிக நிர்வாகிகள் சுதாகர், ரவி ,சுப்பு உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/