புவனகிரி அருகே இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 25 August 2024

புவனகிரி அருகே இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள குமுடிமூலை ஊராட்சியில் உதவும் கரங்கள் பவுண்டேஷன், பி வெல் மருத்துவமனை கடலூர், எக்விடாஸ் அறக்கட்டளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கண் மற்றும் பொது மருத்துவ முகாம் உதவும் கரங்கள் பவுண்டேஷன் நிறுவனர் அருண்மொழி தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் செளந்தரி நடராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் இணைந்து முகாமை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்  மருத்துவர் அருண்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கினார் அகர்வால் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது  முன்னதாக சிறப்பு விருந்தினர்கள் மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பவுண்டேஷன் நிறுவனர் அருண்மொழி சால்வை  அணிவித்து கௌரவித்தார் இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர்.

No comments:

Post a Comment

*/