கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமிற்கு வட்டாட்சியர் தனபதி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி நாகராஜன் வரவேற்றார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி சுவாமிநாதன் புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் முகாமிற்கு சிறப்பு விருந்தினர்களாக சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தனித்துறை ஆட்சியர் முத்திரைத்தாள் தனலட்சுமி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆத்மா குழு தலைவர் டாக்டர் மனோகர் ஆகியோர் பங்கேற்று முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
மேலும் இந்த முகாமில் 16 துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்றனர் இந்த முகாமில் வட கிருஷ்ணாபுரம், மருதூர், சி .ஆலம்பாடி பி .சித்தேரி, குமுடிமூலை ,நத்தமேடு எல்லைக்குடி ஜெயங்கொண்டான் மேலமனக்குடி சாத்தப்பாடி சொக்கன் கொல்லை பி கொளக்குடி உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் சார்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்று கோரிக்கை மனுவினை அளித்தனர் மேலும் இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வடகிருஷ்ணாபுரம் துணைத் தலைவர் அமுதா ராஜேந்திரன் ஊராட்சி செயலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர் முடிவில் வட கிருஷ்ணபுரம் ஊராட்சி செயலர் முருகன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment