கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வாரத் தினத்தை முன்னிட்டு புவனகிரி அரிமா சங்கம் சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது அரிமா சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் செயலாளர் முரளி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார் மருத்துவர் அருண்குமார் ஆகியோர் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து தாய்மார்களுக்கு எடுத்துரைத்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள் வழங்கப்பட்டது மூத்த உறுப்பினர், எல்.என். ரகுபதி தமயந்தி ரகுபதி ஆகியோர் நன்கொடையாக ரூ. 5000 திட்டத்திற்கு வழங்கினார், மேலும் இதில் அரிமா சங்க உறுப்பினர்கள் மகாலிங்கம், சேதுராமன், ராமச்சந்திரன், மேகநாதன், ஜெகநாதன் சிவக்குமார் மற்றும் எல்.என். ராகுல் (புவனேந்திரன்) திரளாக கலந்து கொண்டனர் முடிவில் பொருளாளர் கே பி பாலமுருகன் நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை இராஜேஸ்வரி செய்திருந்தார்
No comments:
Post a Comment