கடலூரில் பேரணி,மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சி யினரை கைது செய்த போலிசார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 August 2024

கடலூரில் பேரணி,மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சி யினரை கைது செய்த போலிசார்.


நாடாளுமன்றத்தில் மோடி அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை மட்டும் திருப்திப்படுத்தி, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்துள்ளது. தமிழகத்திற்கு வரவேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச்செய்யாமல் தமிழக மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது. 

அதிகமான வரி வருவாய் அளிக்கும் தமிழ்நாட்டை புறக்கணிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டாட்சி கோட்பாட்டுக்கு துரோகம் இழைக்கிறது. உணவு மானியத்தை சுருக்கி, உர மானியத்தை வெட்டி, விவசாயிகள் மற்றும் வறுமையில் வாடும் கோடானு கோடி மக்களின் வயிற்றிலடித்துள்ளது. உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெருகி வரும் வேலையின்மை உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிக்குறைத்துள்ளது.


இந்திய நாட்டில் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு செல்வ வரி விதிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வாரி வழங்கி ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றியுள்ளது. நெருக்கடியில் திகழும் சிறு-குறு தொழில்களை பாதுகாக்க நிவாரணம் ஏதும் இல்லை. கார்ப்பரேட் வகுப்புவாத கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கிடும் இந்த நிதி நிலை அறிக்கையை எதிர்த்தும், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விராத பட்ஜெட்டையும், தமிழக விரோதப்போக்கையும் கண்டித்தும்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில்  இன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு  மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

கடலூர் மாவட்டத்தில் கடலூர் சிதம்பரம் விருதாச்சலம் ஆகிய மூன்று மையங்களில் மத்திய அரசு அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம்  நடைபெற்றது  கடலூரில் ஜவான்பவன், அண்ணா பாலம், பாரதி ரோடு வழியாக பேரணியாக வந்து தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. கடலூர்  ஜவான் பவன் அருகே இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 100க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஜவான் பவனிலிருந்துயில் இருந்து அண்ணா பாலம்,பாரதிசாலை வழியாக சென்றனர் திடிரென்று தபால் நிலையம் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர் அவர்களை காவல் துறையினர் தடுக்க முற்பட்டும் சாலையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர் பின்னர் தலைமை தபால் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். 


இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.முற்றுகைப் போராட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ. மாதவன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் வி.குளோப் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபெரேஷன் மாவட்ட குழு உறுப்பினர் சிவலிங்கம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பராயன் ராஜேஷ் கண்ணன் மாநகர செயலாளர் அமர்நாத் ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிவேல், ஆளவந்தார் , பக்கிரான், சரவணன், சிவகாமி, கிருஷ்ணன் , உத்திராபதி , ஜெயபாண்டியன், தமிழ் மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நகர செயலாளர் நாகராஜ் மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், மணிவண்ணன், லாரன்ஸ், ஹரி, கிருஷ்ணன், அமாவாசை, பாலு சி பி எம் ( எம் எல்) லிப்ரேஷன் மாவட்ட குழு உறுப்பினர் கிருபானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள் 

No comments:

Post a Comment

*/