கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதியில் அணைக்கரை பகுதியில் வடக்கு ராஜன் கால்வாய் வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும், காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்குட்பட்ட கீழ்புளியம்பட்டு மற்றும் ஓமாம்புலியூர் கிராமங்களில் நீர் வடிவதற்கு ஏதுவாக வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குமராட்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெராம்பட்டு, ஜெயங்கொண்டப்பட்டினம் மற்றும் அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புயல் வெள்ள தடுப்பு மையத்தில் பொதுமக்கள் தங்குவதற்கு ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், நீர்நிலைகளை கடந்து செல்லுதல், நீந்துதல், மீன் பிடித்தல், நீர்நிலைகளின் அருகே குழந்தைகளை அனுமதித்தல், விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்வழிகள் வழியாக கொண்டு செல்லுதல், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்களோ அல்லது தற்படங்களோ (Selfie) எடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்குமாறு அறிவுறுத்தினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை போன்ற அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளன. கரையோர கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்கவும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆய்வின் போது சிதம்பரம் சார் ஆட்சியர் செல்வி. ரஷ்மி ராணி, மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment