கடன் கொடுத்த நிறுவனங்கள் சேர்ந்த ஊழியர்களும் கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிய வருகிறது ஆகையால் வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் அசிங்கம் அவமானமாக போகுதே என மன உளைச்சலில் இருந்த பெண் வள்ளி மனம் உடைந்து நேற்று வீட்டிலேயே தூக்குபோட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் இறந்து போன வள்ளியின் மகன் ரமேஷ் புகார் கொடுத்ததின் பேரில் காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து வள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற தற்கொலை சம்பவம் தமிழகத்தில் பல இடங்களில் தெரிந்தும் தெரியாமலும் நடைபெற்றுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் தமிழக அரசு முன்வர வேண்டும். தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கிராமம் கிராமமாக சென்று கூவி கூவி அதிக கடனை கொடுத்து கடனாளிகளாக ஆக்கி பெண்களை தற் கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.
கடன் வாங்கியவர் கடன் கட்டவில்லை என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்காமல் ஐந்து பேர் பத்து பேர் நிறுவன ஊழியர்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு கடன் கட்டாத நபரின் வீட்டில் சென்று உட்கார்ந்து கொண்டு கடனைக் கேட்டு நெருக்கடி கொடுப்பதுமல்லாமல் பல இடங்களில் ஊழியர்கள் கடன் வாங்கிய வரை தகாத வார்த்தைகளாலும் பேசி வருகின்றது. இதனால் கடன் வாங்கியவருக்கும் கடன் கொடுத்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் சில இடங்களில் கூட கை கலப்பு ஆகி காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு நடைபெற்று வருகிற சம்பவம் அடிக்கடி நடந்தேறி வருவது வழக்கமாகி உள்ளது.
தமிழகத்தில் இதை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டுமானால் தமிழக முதல்வரோ நீதிமன்றமோ முன் வர வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு தனியார் மைக்ரோ பைனான்ஸ் மூலம் எந்த அடிப்படையில் கூவி கூவி அதிக கடன் தொகைகளை கொடுக்கிறார்கள். கடன் கொடுப்பதினால் இந்தப் பெண்களுக்கு என்ன லாபம் கடன் கொடுப்பது எனக்குத் தெரிந்தவரையில் ஒரு தொழிலை தொடங்கி அதன் மூலம் வருகின்ற வருமானத்தில் ஒரு பகுதி கடனை அடைக்கவும் மறுப்பகுதி தன் குடும்ப வளர்ச்சிக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் பெண்கள் சுய காலில் நின்று வருமானத்தை அதிகபடுத்திக் கொள்வதற்காக தான் இந்தத் திட்டம் என சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் கருதுகிறோம் ஆனால் பல மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வட்டிகளை மட்டுமே குறி வைத்து பெற்று நிறுவனம் வளர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாக எங்ளது பார்வைக்கு தெரிகிறது.
இதை சம்பந்தப்பட்ட துறையை சார்ந்தவர்கள் கண்காணிக்கும் அதிகாரிகள் ஒவ்வொரு மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களையும் ஆய்வு செய்து ஒழுகுமுறைப்படுத்தி சிறு தொழில் செய்யும் மகளிர்களுக்கு கடனை கொடுத்து பெண்களின் வளர்ச்சி பாதைக்கு வழிவகை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதை செய்ய முன் வருவார்களா??? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment