வடக்குபாளையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 72 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 August 2024

வடக்குபாளையத்தில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 72 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வடக்கு பாளையத்தில் ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழா ஸ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கானூர் வேல். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.விஜய உமாநாத் அவர்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி தீபாராதனை காண்பிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து கழக கொடி ஏற்றி அன்னதானமும் வழங்கினார் பின்னர் மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்தநாளையொட்டி பொது மக்களுக்கு 72 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.


முன்னிலை மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.ஆர்.ராஜாவன்னியன் ஆர்.பானுசந்தர் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.முத்துராஜன் மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.எஸ்.கிருஷ்ணராஜ் மா.ம.அணி துணை செயலாளர் ஜான்செலின்மேரி ஒன்றியம் மகளிரணி ஆர்.தீபா வரவேற்புரை ஒன்றிய நிர்வாகி ஆர்.ராஜாராம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஒன்றிய துணை செயலாளர் முருகவேல் மாவட்ட பிரதிநிதிகள் ஜோதி பாஸ் சுப்பிரமணியன் மகளிர் அணி ராஜம் வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் பாண்டியராஜன் கோவிந்தராஜ் கண்ணன் கிளைக் கழக நிர்வாகிகள் ராஜதுரை ராஜேந்திரன் புதுராசா சுப்பிரமணி கோபால் செல்வராஜ் ஆரோக்கிய சுந்தரம் டி ஜே ராஜ் ராஜசேகர் சிவன் செயல் குமரவேல் அந்தோணிசாமி அடைக்கலம் ராஜேஷ்குமார் ரவிக்குமார் குறளரசன் சேட்டு மகளிர் அணி பேபி செல்வராணி ஜமுன கொளஞ்சியம்மாள் செல்வி மண்ணிலா தனலட்சுமி மற்றும் கிளை நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் நன்றியுரை கிளைக் கழகச் செயலாளர்கள் ஏ.புனிதவேல் சம்மந்தம் ஆனந்தராயர்.

No comments:

Post a Comment

*/