சிறப்பு விருந்தினராக சொல்லாட்சித் தமிழர் முனைவர் அய்யாறு ச.புகழேந்தி வருகை புரிந்து மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த நல்லபல கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக கல்வி சம்பந்தமான பல நல்ல கருத்துக்களை நயம் பட எடுத்துரைத்தார். தமிழின் பெருமையையும், இலக்கியத்தின்இனிமையையும், அவ்வையின் ஆத்திச்சூடி, வள்ளுவரின் திருக்குறள், நான்மணிக்கடிகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற தமிழின் பெருமையைக் கூறும் பாடல்களை நயம் பட மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினர்.
உலகின் முதுமொழி தமிழ் மொழியே என்பதை மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுடன் விவரித்தனர். மாணவர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்ப் பேச்சு, தமிழ்க் கவிதை, தமிழ்ப் பாடல், கிராமியக் குழு நடனம் என்று மாணவிகள் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களை வியக்க வைத்தன. இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment