நெய்வேலியில் வாலிபரை தாக்கி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 August 2024

நெய்வேலியில் வாலிபரை தாக்கி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

 


கடலூர் மாவட்டம் நெய்வேலி 30வது வட்டம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த கோபி.இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த அன்பு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இது குறித்து அன்பு அதே பகுதியைச் சார்ந்த தனது நண்பர் நடராஜன் என்பவரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதியில் கோபி சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிள் வந்த நடராஜன் மற்றும் அன்பு ஆகியோர் கோபியை வழிமறித்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.



இது குறித்து நடராஜன் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் இரண்டு பேரை கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சின்ன காப்பான் குளம் பகுதியைச் சார்ந்த விக்கி என்பவரை தேடி வந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அங்கு அவரை பிடிக்க முயன்றனர். 


அப்போது போலீசாரிடம் தப்பி ஓடியதில் தவறி கீழே விழுந்த விக்னேஷுக்கு வலது கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

*/