இந்தஆலயத்தில் ஸ்ரீ பூரணி, பொற்கிலை சமேத ஐயனார் மற்றும் ஸ்ரீ வீரனார் ஆகிய தெய்வங்களுக்கும் திருக்கோவில் அமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்த கூலிஅம்மன் ஆலயம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. இந்த ஆலயத்தை 20 ஆண்டுகளாக பெருமுயற்சி எடுத்து அதன் பிறகு இப்போது திருக்கோவிலாக புதியதாக வடிவமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.
17/08/2024 சனிக்கிழமை அனுக்கை, மகா கணபதி ஹோமம், தேவதா அனுக்கை, எஜமான அனுக்கை மற்றும் ரக்ஷா பந்தனம், வாஸ்து சாந்தி, பிரவேசப்பலி, சுமங்கலிகள் முளைப்பாரி ஊர்வலம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை ஹோமம், மஹாபூர்ணாகுதி, மகா தீபாராதனை ஆகியவை நடந்து 18/08/2024 ஞாயிறு இரண்டாம் கால யாகசாலை ஹோமம் மற்றும் விசேஷ திரவிய ஆஹுதி, மகாபூர்ணாஹுதி,மகா தீபாராதனை செய்யப்பட்டு மூன்றாம் கால யாகசாலை ஹோமம், தத்துவர்த்தனை, மூல மந்திர ஜெப ஹோமம், சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தி மகாபூரணாஹுதி, திருமுறை விண்ணப்பம், மகா தீபாராதனை அதனைத் தொடர்ந்து 19/08/2024 திங்கள் கிழமை காலை நான்காம் கால யாகசாலை ஹோமம், பிம்பசுத்தி நாடி சந்தானம், நாமகரணம் சூட்டி, கோ தரிசனம், தச தரிசனம், மகாபூர்ணாஹுதி, யாத்திரா தானம், கடம் புறப்பாடு நடந்து காலை 10 மணிக்கு கோபுர கலச கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 10 15 மணிக்கு மூலவர் மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த திருக்கோவில் கும்பாபிஷேகத்தை செங்கல்மேடு கிராமத்தினர் அனைவரும் பங்கெடுத்து நடத்தினார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டு கூலியம்மனின் அருளாசியைப் பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment