கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது சுரங்க 2 விரிவாக்க பணியை கரிவெட்டி, கத்தாழை, வளையமாதேவி, உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது இந்த நிலையில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட கிராம மக்களுக்கு என்எல்சி நிறுவனம் சார்பாக மாற்றுமனை வழங்கப்பட்டு வருகிறது.
என்எல்சி நிறுவனத்தால் வழங்கப்படும் மாற்று இடத்தில் விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளதால் விவசாயம் செய்யும் சூழலில் மாற்று இடங்களை வழங்க வேண்டும் எனவும், குடும்பத்திற்கு 10 சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும் எனவும், போக்குவரத்து, தண்ணீர் வசதி, மருத்துவம், கல்விக்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் மாற்று மணை வழங்க வேண்டும் எனவும் விவசாய மக்களின் நலனை கருத்தில் கொண்டு R&R பாலிசியை அமல்படுத்தி மாற்றுமனை இழப்பீடு உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று கூறி நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் நுழைவாயில் முன்பு என்எல்சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment