வடலூர் அருகே தென்குத்து கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 August 2024

வடலூர் அருகே தென்குத்து கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தார்.


கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள தென்குத்து கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது இதில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வீரனார் சுவாமி, பாலமுருகன், சப்த கன்னிகள், அய்யனாருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி முதற்கால யாக பூஜையும்,  18ம் தேதி காலை இரண்டாம் காலை யாக பூஜையும் இரவு மூன்றாம் காலை யாகபூஜையும், 19ஆம் தேதி நான்காவது காலயாக  பூஜை நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கி  புனித நீர் ஊற்றப்பட்ட கலசத்தை சிவாச்சாரிகள் தலையில் சுமந்து வந்து ராஜ கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.

இதனை தென்குத்து, வடக்கு மேலூர், வாணதிராயபுரம், கோட்டகம் உள்ளிட்ட கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு களித்தனர்.

No comments:

Post a Comment

*/