தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட பிரதிநிதி சங்கர் தலைமையில் சிறப்பு அழைப்பினராக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் கலந்து கொண்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார் பின்பு அங்கிருந்து அமைதி பேரணியாக அரசு மருத்துவமனை வரை சென்று பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் பேரூராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி சங்கர்.பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முஹம்மது யூனுஸ்.முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் செழியன்.பரங்கிப்பேட்டை வட்டாரப் தொழில் வர்த்தக சங்கம் தலைவரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான ஆனந்தன். நகர இளைஞரணி அமைப்பாளர் ஜாபர் ஷெரீஃப் தகவல் தொழில்நுட்ப அணி நகர ஒருங்கிணைப்பாளர் ஷே.அப்துல் முனாப் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கலீல்.திமுக வார்டு கவுன்சிலர்கள்.மற்றும் கழக நிர்வாகிகள்.கழக இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்
- செய்தியாளர் சாதிக் அலி.
No comments:
Post a Comment