சேத்தியாத்தோப்பு அருகேவீராணம் ஏரியில்ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

சேத்தியாத்தோப்பு அருகேவீராணம் ஏரியில்ஆடிப்பெருக்கு விழா உற்சாக கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, மற்றும் வடக்கு ராஜன் வாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதுமண தம்பதியர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆடிப்பெருக்கு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். புதிதாக தற்போது வந்துள்ள காவிரிநீரில் வழிபாடுகள் செய்த அவர்கள் சூரிய பகவானுக்கும் மற்றும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிரூட்டி வரும் நீருக்கும் நன்றிதெரிவித்து வழிபட்டனர்.
 

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த அவர்கள்   தொடர்ந்து நீர்நிலைகளில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு போய் கட்டாந்தரையாக காட்சியளித்தது. இருந்தபோதிலும் இயற்கை எப்போதுமே விவசாயிகள் பக்கம் இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக இயற்கையாக பெய்த மழைத் தண்ணீர் தற்போது வந்து ஏரியை நிரப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

*/