ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிராம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ பிராம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த மேட்டுக்குப்பம் ஆர்ச் கேட் எதிரே அமைந்துள்ள ஸ்ரீபிரம்மமுகி தில்லை காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத அம்மாவாசை  முன்னிட்டு  ஸ்ரீ பிராம்மமுகி தில்லை காளியம்மன்  ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது, முன்னதாக சன்டி ஓமம் மேற்கொள்ளப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி கலசபுறப்பாடு நடைபெற்றது.

பின்னர் கலசத்தில் உள்ள நீரினால் கற்பகிரகத்தில் உள்ள பிரம்மமுகி தில்லை காளியம்மனுக்கு சிறப்பான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது தொடர்ந்து பம்பை இசை முழங்க , அம்மன், அங்காளம்மன், நாகாத்தம்மன் ,புத்துமாரியம்மன் ஆகிய வேடமிட்டு ஆடல் பாடலுடன் காளி நடனம் நடைபெற்றது இறுதியில் இரவு  12 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள 72 அடி உயர தில்லை காளி சிலைக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது, நிகழ்வில் பல்வேறு பகுதியை சேர்ந்த  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். 

No comments:

Post a Comment

*/