சிதம்பரம் அண்ணாமலை நகர் டி என் 91 பிரியாணி உணவகம் திறக்கப்பட்டது 1+1 சலுகை அறிவித்த நிலையில் கடைமுன் குவிந்த கூட்டம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் பொறியியல் கல்லூரி ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட டி என் 91 பிரியாணி உணவகம், நேற்று பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என கடை நிர்வாகம் சலுகை அறிவித்த நிலையில் அதை வாங்குவதற்கு பில் போட்டுவிட்டு குவிந்த கூட்டததை கடை நிர்வாகத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை, முறையாக டோக்கன் வரிசைப்படி கொடுக்கப்படவில்லை வரிசையாகவும் நின்று கட்டுப்படுத்தவில்லை இதனால் இதனால் பல பேர் 12 மணி முதல் 3 மணி வரை பில் போட்ட நிலையில் பலர் காத்திருந்தனர், பல பேர் தாங்கள் பில் போட்டதற்கு பணத்தை திரும்பி கேட்டதால் திணறிய நிர்வாகம்.
பிரியாணி கொடுக்க முடிவில்லை, பணத்தை திரும்பி கேட்டாலும் கொடுக்கவில்லை, சலுகை அறிவிக்கும் முன் அதன் முழு திட்டமிடலை செயப்படுத்த வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை நேரில் ஆய்வு செய்யவேண்டும் என்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் P ஜெகதீசன்.
No comments:
Post a Comment