உறவினர்கள் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அருண்மொழிதேவன் நேரில் வந்து மாணவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் கிஷோர் பள்ளியில் விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த பதக்கங்கள் கோப்பைகளை காண்பித்தனர்.
இதையடுத்து நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் காவல்துறை சார்பாக மாணவன் உடலுக்கு மலரஞ்சை செலுத்தினார். இன்று மாலை நாலு மணி அளவில் மாணவன் கிஷோர் உடலை இறுதி சடங்கு முடிக்கப்பட்டு பூரணமாக இடுகாட்டுக் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்தனர். இந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களிடம் வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது பள்ளி தாளாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியராக செயல்பட்ட மாற்று ஆசிரியரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment