ஸ்ரீமுஷ்ணம் அடுத்து பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

ஸ்ரீமுஷ்ணம் அடுத்து பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மழலையர் மற்றும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் நாட்டின் 78 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது விழாவில் பாளையங்கோட்டை மேல்பாதி ஊராட்சி மன்ற தலைவர் வினிதா முருகன் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். 

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் குழந்தைவேலு பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு சீனிவாசன் முன்னிலை வகித்தனர், தலைமை ஆசிரியர் ( பொறுப்பு) மலைமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர் மேலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் கொடையாளர்கள்  பெற்றோர்கள் ஆசிரியர்கள் மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் சத்துணவு மைய பொறுப்பாளர் மற்றும் அங்கன்வாடி மைய பொறுப்பாளர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள்  தேசப்பற்றுள்ள பாடல்களை பாடி நடனமாடி அசத்தினர். இறுதியில் ஆசிரியர் பால் சேவியர் நன்றி உரை கூறினார்.

No comments:

Post a Comment

*/