பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

பூதங்குடி எஸ். டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா பூதங்குடியில் அமைந்துள்ள எஸ்.டி. சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாமுவேல் சுஜீன் நிர்வாக இயக்குனர் டாக்டர் தீபா சுஜீன் (குழந்தைகள் நல மருத்துவர்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.  சிறப்பு விருந்தினர்களாக R. V. மகாலட்சுமி BSc. மாவட்ட கவுன்சிலர் அவர்களும் திரு. வெங்கடேசன் தொழிலதிபர் அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.  

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல்வேறு தேசத் தலைவர்களின் தியாகத்தினை வெளிக்கொணரும் நோக்கில் பள்ளி மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மாணவர்கள் பல்வேறு தேசத் தலைவர்களை போன்று வேடமடைந்து நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட நம் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள் அடைந்த இன்னல்களையும் மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தனர்.  இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் திரு. அந்தோணி ராஜ் அவர்களும் பள்ளியின் சீனியர் பிரின்சிபல் திரு. இப்ராகிம் செரீப் அவர்களும் முன்னிலை வகித்தனர்.

No comments:

Post a Comment

*/