புவனகிரி வெள்ளாற்று நீரில் இருந்து சுமார் 500 ஆண்டுகால பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கல் சிலை கண்டெடுப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 August 2024

புவனகிரி வெள்ளாற்று நீரில் இருந்து சுமார் 500 ஆண்டுகால பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கல் சிலை கண்டெடுப்பு.


கடலூர் மாவட்டம் புவனகிரி வெள்ளாற்று பாலத்தில் நீரில் இருந்து  பழங்கால துர்க்கை அம்மன் கல் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது  சிலை ஒன்று நீரில் இருப்பதாக பொதுமக்கள் வருவாய் துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சிதம்பரம் தீயணைப்பு துறையினருக்கு வருவாய் துறையினர் தகவல் கொடுத்தனர் இதனை அடுத்து வந்த தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி பிரபாகரன் தலைமையில் வெள்ளற்று நீரில் இருந்த பழங்கால கல் சிலையை எடுத்தனர் கண்டெடுக்கப்பட்ட சிலை புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தனபதி வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிலை எடுக்கும் சம்பவத்தை காண பொதுமக்கள் பாலம் நெடுகிலும் திரண்டு இருந்தனர் சிலையை பற்றி அதிகாரிகள் தெரிவிக்கும் பொழுது சுமார் 500 ஆண்டுகால பழமை வாய்ந்த சிலையாக இருக்கும் என தெரிவிக்கின்றனர் மேலும் இந்த சிலை தொல்லியல் துறைக்கு  அனுப்பி வைக்கப்படுவதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர் 

No comments:

Post a Comment

*/