கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையில் தீமிதி திருவிழா நடைபெற்றது .35 ஆம் ஆண்டு தீமிதி விழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவிலின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி ஆரம்பித்தது தினமும் அம்மன் வீதியுலா, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
இதனையடுத்து சிகர நிகழ்வாக தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோவிலின் அருகில் ஏற்படுத்தப்பட்ட தீக்குழியில் இறங்கி பக்தர்கள் ஸ்ரீ முத்துமாரியம்மனை வேண்டி தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த தீமிதிதிருவிழாவில் கானூறை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்று தீமிதி விழாவை கண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment